Image and video hosting by TinyPic

Friday, March 4, 2016

வெப்சைட் உருவாக்குதல் அல்லது இணையதளம் அமைத்தல்



ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று பார்ப்போம்.
முகப்பு பக்க அளவு

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனை பார்க்க விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தினைக் பார்க்கும் முயற்சியை கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் பார்க்க விரும்புவார்கள்.

ஏனெனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே உள்ளூர் மக்கள் தான் பார்ப்பார்கள் என்றால் 50 கேபிக்குள் இருப்பது நல்லது இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளே மற்றும் எனிமேன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

முதல் ஈர்ப்பு

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விடயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைய வேண்டும்.

நேரம்

இப்போது பிளே தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளே காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டாம்.

வெறும் எழுத்துக்கள் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கு பெருமை சேர்க்கும்.

தொடர்பு

நீங்கள் வழங்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைப் பார்ப்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம்.

எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் வழங்கலாம் அல்லது பார்ப்பவரின் கணனியில் உள்ள ஈமெயில் கிளைனண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

புதுமை

புதுமையைத் தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையத்தளத்தை புதுப்பித்துக் கொண்டே இருங்கள் அதற்காக முழுமையாக அதனை மாற்ற வேண்டியது இல்லை. சிறிய மாற்றங்களை அவ்வப்போது செய்தால் போதும். அப்போது உங்கள் தளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடலாம்.

விடயம்

உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல்களும் அதனுடன் தொடர்பு பட்ட விடயங்கள் அல்லது பொருட்களின் தகவல்கள் நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றிய தகவல்களையும் வழங்கலாம்.

மேம்பாடு

உங்களது தளத்தை போன்று இயங்கும் மற்றவர்களின் தளங்களை அடிக்கடி சென்று பார்வையிடுவதன் மூலம் உங்கள் தளத்தை அதனைவிட மேம்படுத்தலாம்.

தேடல்

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது மற்ற பிரவுஸர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தன் சகல தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஒப்பரேட்டிங் முறைகளிலும் இயக்கி பார்த்திட வேண்டும்.

படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புக்களில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்து பார்க்க வேண்டும்.

சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை விடேமாக அமைப்பதற்கு முன்னர் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்து உருவினை டவுண்லோட் செய்து கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.

எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளமும் காட்சியளிக்கும்.

விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் வழங்குவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சில சமயம் சகித்து கொள்ள முடியாமல் இருக்கும்.

பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினை பார்வையிடுபவர்கள் அத்தளத்தினுள் நுழைந்து வேறு ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு வலயங்களை அமைப்பது மிகவும் முக்கியமாகும்.
உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.

www.infotechwebs.com

No comments:

Post a Comment